கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழி உண்டு. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளு பருப்பு சிறப்பாக செயல்படும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கொள்ளு பருப்பு அற்புதமான உணவு. கொள்ளு பருப்பு சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

கொள்ளு பருப்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை பருகினால் ஜலதோஷம் நீங்கும்.

வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் கொள்ளு பருப்பு மிகவும் உகந்தது.

கொள்ளுப் பருப்பில் மாவுச் சத்து அதிக அளவில் உள்ளதால் இதனை ஊற வைத்தும் சாப்பிடலாம். வறுத்தும் சாப்பிடலாம். ஊற வைத்த தண்ணீரையும் குடிக்கலாம்.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறைவதை உங்களால் பார்க்க முடியும்.

கொள்ளுப் பருப்பை வறுத்து பொடி செய்து, ஒரு டம்ளர் சுடுதண்ணியில் ஒரு ஸ்பூன் கொள்ளு பவுடர் போட்டு, சிறிதளவு சீரகத்தை சேர்த்து அதனை மறுநாள் காலை குடித்து வந்தால் ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையை குறைக்க முடியும்.

கொள்ளுப் பருப்பும், அரிசியும் கலந்து கஞ்சி தயாரித்து சாப்பிட்டால் நல்ல பசி உணர்வைத் தூண்டும்.

குழந்தைகளுக்கு சளி தொல்லை ஏற்பட்டால், கொள்ளு பருப்பு சூப் வைத்து கொடுங்கள். சளி காணாமல் போய்விடும்.

கொள்ளு பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இருமல், ஜலதோஷம், உடல் வலி, உடல் சோர்வு ஆகியவற்றை சரி செய்யும்.

கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலியை குணப்படுத்தும். நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

Recent Post