கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கொத்தமல்லிக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தமல்லியை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து காலை மதியம் இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பலம் பெறும்.

சிறுவயதிலிருந்தே கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மங்காது.

கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான நோய்கள், கண் கோளாறுகளை சரி செய்யும். ரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

நரம்புத்தளர்ச்சியை போக்கும். மூக்கடைப்பு மூக்கு சம்பந்தமான நோய்கள் குணமாகும். பித்த வாந்தியை கட்டுப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், கொத்தமல்லிக்கு இணை அதுவே. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் முக்கியமானது. எனவே சிந்தித்து செயல்படுங்கள்.

வாய் புண், வாய்துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு இன்றியமையாத பொருள் என்றால் அது கொத்தமல்லி தான். கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது செரிமான பிரச்சனைகளையும் சரி செய்து விடும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளுக்கும் கொத்தமல்லி நல்ல பயனைத் தரும். இந்த கொத்தமல்லியை சாப்பிட்டால், ரத்த சோகை போன்ற நோய்களும் நம்மை நெருங்காது.

சுகர் நோயாளிகளுக்கு அர்ப்புதமான மருந்து இந்த கொத்தமல்லி. உடலில் உள்ள சர்க்கரையை சமஅளவில் வைக்க இந்த கொத்தமல்லி மிகவும் உதவும்.

வயிற்றை சுத்தப்படுத்தவும் கொத்தமல்லிச் சாறைக் குடிப்பதுண்டு. வயிற்றில் உருவாகும் புற்றுநோயை ஆரம்ப நிலையில் அழிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

Recent Post

RELATED POST