கொத்தவரங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

கொத்தவரை செடி 3 முதல் 4 அடி உயரம் வளரக்கூடியது. கொத்தவரங்காய் பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும் தன்மையுடையது. மருத்துவ குணம் நிறைந்த காய்கறிகளில் கொத்தவரங்காயும் ஒன்று. இதில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

கொத்தவரங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் இது இதயத்திற்கு நன்மை அளிக்கிறது.

வாரம் இரண்டு முறை கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது. இதன்மூலம் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

ரத்தசோகை

ரத்தசோகை உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ரத்தம் அதிகமாக சுரக்கும். இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்.

சர்க்கரையின் அளவு

தினமும் 10 கிராம் அளவு கொத்தவரங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது மிக முக்கியம். கர்ப்பிணிப் பெண்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டு வருவதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

நார்ச்சத்து

கொத்தவரங்காயிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா நோயை தணிக்கக் கூடிய சக்தி கொத்தவரை செடியில் உள்ளது. கொத்தவரங்காய் செடி கிருமிநாசினியாகவும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.

நரம்புகளை வலுப்படுத்தும்

உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காயில் உள்ளது. எனவே கொத்தவரங்காயை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

செரிமான பிரச்சனை

உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். அந்த நேரத்தில் கொத்தவரங்காயை சமைத்து சாப்பிட்டால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை சரிசெய்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

சரும ஆரோக்கியம்

கொத்தவரங்காயை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.