நன்றாக பசியைத் தூண்டும் குப்பை கீரையின் நன்மைகள்

உடலுக்கு அதிக நன்மை தரும் கீரைகளில் குப்பைக்கீரையும் ஒன்று. இது பெரும்பாலும் தரிசு நிலங்களிலும், குப்பை மேடுகளிலும்தான் வளருகிறது. இதற்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு. இதன் தாவரப்பெயர் அமராந்தஸ் விரிடிஸ் (Amaranthus Viridis) ஆகும்.

குப்பை கீரையில் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.

100 கிராம் குப்பைக்கிரையில் இருக்கும் சத்துக்கள்

குப்பை கீரையின் மருத்துவ பயன்கள் (உணவாக)

நன்றாக பசியைத் தூண்டும். குடலை (Intestine) ஆரோக்கியமாக பாதுகாத்து, மலச்சிக்கல் (Constipation) பிரச்சனையை தீர்க்கும்.

இக்கிரையில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் ஏற்படும் புண்களை வேகமாக குணமாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

உடலில் தேவையில்லா கெட்டக் கொழுப்பைக் (Bad Cholesterol) கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தி (Blood Purification) இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கால்சியம் சத்தும், உப்பும் அதிகமாக இருப்பதால் கை, கால் நடுக்கம் குணமாகும், நரம்பு மண்டலமும் வலுபெறும். நரம்புத் தளர்சியைப் (Nervous Disorder) நீக்கும். வாதநோயை கட்டுப்படுத்தும்.

குப்பைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கீரைப்பொரியல் சளி, இருமலை போக்கும். சிறுநீர் நன்கு பிரியும்.

ஒரு கைப்பிடி குப்பைக்கீரையுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் (Acidity) குணமாகும்.

குப்பை கீரையின் மருத்துவ பயன்கள் (மருந்தாக)

உடலில் ஏதேனும் வீக்கம் ஏற்ப்பட்டால் குப்பைக்கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் குறையும்.

உடலில் கட்டிகள் (Tumor), தழும்பு, மரு, முகப்பரு இருந்தால் அதன் மீது குப்பைக் கீரையை அரைத்து தடவினால் கட்டிகள் கரைந்துவிடும்.

Recent Post

RELATED POST