சரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை

குப்பைமேனி மூலிகை சித்த மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க மூலிகைச் செடியாக கருதப்படுகிறது.

குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை. இந்த மூலிகை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.

குப்பைமேனி, அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் சாலையோரங்களில் அதிகம் காணப்படும். இந்த மூலிகையில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

மூட்டுவலி, தலைவலி, ரத்த மூலம், ஆஸ்துமா, விஷக்கடி போன்ற பிரச்சனைகளுக்கு குப்பைமேனி நல்ல மருந்தாக பயன்படுகிறது.

சரும அழகு

குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து சருமத்தை அழகாக வைத்திருக்கும்.

இருமல் தொல்லை

குப்பைமேனி இலைகளை நன்றாக சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், கபம் நீங்கும்.

செரிமான பிரச்சனை

சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் குப்பைமேனி இலையை கஷாயம் செய்து குடித்தால் நன்கு செரிமானமாகும்.

குடல் பூச்சிகள்

குப்பைமேனியின் வேரை தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் குடலில் உள்ள பூச்சிகள் அழியும்.

சரும நோய்கள்

குப்பை மேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் உடலில் சொரிசிரங்கு போன்ற சரும நோய்கள் முற்றிலும் குணமாகும்.

விஷக்கடி

பூச்சி, பூரான் போன்றவற்றால் ஏற்படும் விஷக்கடிக்கு குப்பைமேனி கஷாயம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

மூட்டு வலி

குப்பைமேனி இலை சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி மூட்டு வலி உள்ள இடத்தில தடவி வந்தால் மூட்டு வலி குணமாகும்.

படுக்கைப்புண்

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி லேசான சூட்டுடன் காட்டினால் படுக்கை புண்கள் ஆறும்.

Recent Post