வெண்டைக்காய் என்பது உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்கும் ஒரு முக்கிய காய்கறியாகும். இதில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கொழுப்பு, வைட்டமின் கே, வைட்டமின் இ மற்றும் இரும்புச்சத்துக்கள் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வெண்டைக்காய் நமது மூளைக்கு மட்டுமல்ல, உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெண்டைக்காயை சமைத்து சாப்பிடுவது நல்லது. வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் பலன்களை இந்த பதிவில் ஆராய்வோம்.
வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து, நமது உணவின் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும், மலச்சிக்கல் மற்றும் வயிறு கோளாறுகளைத் தடுப்பதிலும் உதவுகிறது.
வெண்டைக்காயை உணவில் சேர்த்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 63 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வெண்டைக்காயில் உள்ள ஃபோலேட் என்ற முக்கிய ஊட்டச்சத்து கர்ப்பிணி பெண்களின் ஹீமோகுளோபின் அளவை சரிசெய்வதற்கும், இரும்பு சத்து பற்றாக்குறையை தவிர்க்கவும் உதவுகிறது.
வெண்டைக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கல்லீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.
வெண்டைக்காயில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின் ஏ கண்பார்வையை தெளிவாக்கி, பார்வைக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கும்.