எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சையில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. எலுமிச்சை உணவுப்பொருளாகவும் மருந்தாகவும் நமக்கு பயன்படுகிறது. மேலும் திருஷ்டி பரிகாரங்களுக்கும், மந்திர தந்திர காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

எலுமிச்சை பழத்திலிருந்து லெமன் ஜூஸ், லெமன் ஊறுகாய், லெமன் டீ, லெமன் சோடா என பல உணவுப்பொருட்கள் கிடைக்கிறது. இதில் புளிப்பு சுவை அதிகம் உள்ளதால் இதனை நேரடியாக உட்கொள்ள முடியாது.

எலுமிச்சை பழத்தை கோடைக்கலாம், மழைக்கலாம், பனிக்கலாம் போன்ற எல்லா காலங்களிலும் பயன்படுத்தலாம். நாம் சமைக்கும் காய்கறிகளில் எலுமிச்சை சாறை சேர்க்கும்போது அதன் சத்துக்கள் மேலும் அதிகமாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்குகிறது. இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளையும் அழித்துவிடுகிறது.

உடல் எடை குறைய

மிதமான சுடுநீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.

கல்லீரல் பாதுகாப்பு

அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும்போது கல்லீரலில் தேவையில்லாத நச்சுக்கள் சேர்ந்து பிற்காலத்தில் நோய்களை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க வாரத்திற்கு இருமுறை எலுமிச்சை சாறு அருந்த வேண்டும். இதனால் கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கும். குறிப்பாக மது, புகைப்பழக்கம் உள்ளவர்கள் அவசியம் இதனை பின்பற்ற வேண்டும்.

எலும்புகளுக்கு வலிமை

எலுமிச்சை பழச்சாற்றை அடிக்கடி அருந்தி வந்தால் அதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளுக்கு சக்தியை அள்ளித்தரும். மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது.

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சை பழத்தை போல அதனுடைய தோலில் பல சத்துக்கள் உள்ளன. தோலில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நீரில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி வாய்கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

Also Read : எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தரும். எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் வெட்டை சூடு, மலச்சிக்கல், நீர்சுருக்கு, பித்தநோய் ஆகியவை நீங்கும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் தீரும்.

சூடான நீரில் எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ஓமத்தை கலந்து குடித்துவர செரிமானப் பிரச்சினை மற்றும் வாயுப் பிரச்சினை குணமாகும்.

எலுமிச்சம் பழச் சாறு, தக்காளிச் சாறு – இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகப்பொலிவு கூடும்.

எலுமிச்சம் பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் மறையும்.

Also Read : சரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்

எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து உதடுகளில் பூசி வந்தால் புதுப்பொலிவு கிடைக்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசிவந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சர்க்கரை கலந்து உடலில் கருமையான இடங்களில் பூசிவந்தால் விரைவில் நிறம் மாறும்.

எலுமிச்சம் பழச்சாறு, வெள்ளரிக்காய், தக்காளி மூன்றை யும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோலின் கறுப்பு நிறம் மாறும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி உடனே நிற்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் கோதுமை மாவைக் குழைத்து கட்டிகள், வியர்க்குரு போன்றவற்றின் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.

Recent Post

RELATED POST