எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்..!

எலுமிச்சை சாறு நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது. காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எடை குறையும். மேலும் செரிமானம் நன்றாக செயல்படும்.

எலுமிச்சை சாற்றில் பல நன்மைகள் இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் உடலில் அதிகமானால் பல முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் சி அதிகமானால் வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Also Read : எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வாய் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் எலுமிச்சை சாற்றை குடிக்கும்போது, கண்டிப்பாக ஸ்ட்ரா பயன்படுத்துங்கள், ஏனெனில் இது பற்களுடன் எலுமிச்சை சாற்றின் தொடர்பைக் குறைக்கும். இதனால் பற்கள் பலவீனமடையாது.

Recent Post

RELATED POST