சிறுத்தை பற்றிய சில தகவல்கள்

சிறுத்தை, தோற்றத்தில் சிங்கம் மற்றும் புலியை விட சிறிது. பாலூட்டிகளில் மிகவும் துடிப்பான விலங்கு. ஓரளவு பாலைவனமாக உள்ள பகுதிகளில் பாறைகள் நிறைந்த மரங்களற்ற பகுதிகளில் வாழும். சிறுத்தை, மங்கிய நிறத்துடன் உருவத்தில் பெரியதாக தோற்றம் அளிக்கும்.

சிறுத்தை பொதுவாக, 1 முதல் 1.5 மீட்டர் நீளமும் 90 கிலோ எடையும் கொண்டிருக்கும். தாழ்வான காடுகள் நிறைந்த பகுதிகள் அல்லது மலைப்பிரதேசங்களில் காணப்படும்.

ஒரு சிறுத்தை 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தை தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும்.

ஒரு விநாடிக்கு 10 மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 113 கிலோமீட்டர் என தரையில் வசிக்கும் விலங்கினங்களில் வேகமாக ஓடும் திறன் கொண்டது சிறுத்தை.

சிறுத்தை, அளவில் சிறிய தாகவும், கருமையான உடலில் பெரிய பட்டைகளும், வளையங்களும் கொண்டு காட்சியளிக்கும்.

சில பகுதிகளில் கரிய நிறமுடைய ‘கருஞ்சிறுத்தைகள்’ காணப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சிறுத்தை, அழகிய மென்மையான வழவழப்பான மஞ்சள் அல்லது சாம்பல் நிறமுடைய தோலும், அதில் ரோஜா வடிவ வளையங்களும் பெற்றுத் தோற்றமளிக்கும். பகல் நேரத்தில் சிறுத்தை புகையிலை இலைகள் நிறைந்த மரத்தில் பதுங்கி இருக்கும்.

கொல்லப்பட்ட இறைச்சி பெரிதாக இருப்பின், ஒரே நேரத்தில் உண்ண முடியாது. கையால் உண்டது போக எஞ்சிய உடலை, மரத்தின் மேற்பகுதிக்கு இழுத்துச் சென்று மறைத்து வைத்துக் கொள்ளும்.

ஒரே வகையான உணவிற்குப் போட்டியிடுவதால், சிறுத்தைக்கு விரோதியாக விளங்குவது புலி.

Recent Post

RELATED POST