தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களுக்கு மழை தொடர்பாக எச்சரிக்கை விழிப்புணர்வை காவல்துறை வெளியிட்டுள்ளது.
மழை காலத்தில் மக்கள் செய்யக் கூடாதவை என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
குளியலறைகள், கழிப்பறைகள் போன்ற ஈரமான இடங்களில் வெறும் கைகளால் சுவிட்சுகளை தொட வேண்டாம்.
ஈரமான துணிகளை உலர்த்துவதற்காக மின்கம்பங்களில் கயிறு கட்ட வேண்டாம்
பந்தல்கள், விளம்பரப் பலகைகளைக் கட்ட மின் கம்பங்கள் பயன்படுத்த வேண்டாம். அதே போல மின்கம்பங்கள், கம்பிகளில் கால்நடைகளைக் கட்ட வேண்டாம்.
மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்.
இடி, மின்னலின் போது மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். மின்னலின் போது திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பை அணைக்கவும்.