லிச்சி பழத்தில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய லிச்சி பழம் மிகவும் இனிப்பு சுவையை கொண்டது. இதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த லிச்சி பழங்கள் வெயில் காலங்களில் மிகவும் அதிகமாக கிடைக்கிறது.

லிச்சி பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லிச்சி பழங்கள் கிடைக்கிறது. இதை பச்சையாகவும் சாப்பிடலாம் அதே நேரத்தில் ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.

லிச்சி பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. லிச்சி பழத்தில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலத்தில் இதனை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

மற்ற பழங்களை விட இதில் பாலிஃபீனால் அதிகமாக இருக்கிறது. இதனால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு வராமல் தடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். புற்றுநோய் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.

லிச்சி பழத்தில் தொப்பையை குறைக்க கூடிய காரணிகள் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். லிச்சி பழம் நம் வயிற்றுக்குள் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கிறது.

ஒவ்வொரு பழங்களிலும் பலவிதமான நல்ல குணநலன்கள் இருக்கிறது தேவையற்ற நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் பழங்கள் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Recent Post

RELATED POST