லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு… என்ன காரணம்?

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில்  கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார்.

கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 8 கோடி பட்ஜெட்டிற்குள் உருவான இப்படம் இதுவரை ரூ. 38 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்படம் வரும் இன்று (அக்டோபர் 18) சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது திரையரங்கிலேயே லப்பர் பந்து படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிம்பிளி சௌத் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Recent Post