காரில் சென்ற முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கேட் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டதில் கலந்துகொண்டு விட்டு கடோலுக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.

இரவு 8 மணி அளவில் கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் உள்ள பெல்பாட்டா அருகே வந்தபோது மர்மநபர்கள் சிலர் அவருடைய கார் மீது கல் வீசியுள்ளனர். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent Post

RELATED POST