வீட்டில் பாம்புகளுக்கு தனி அறை…அசால்ட்டாக விளையாடும் குழந்தைகள்

ஒரு பாம்பு வந்தால் படை நடுங்கி ஓடும் என்று சொல்வார்கள். ஆனால், அந்த பாம்புகளுக்கு தனித்துவமாக அறை ஒதுக்கி, கிராம மக்கள் அவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் பல சுவாரசியங்கள், வினோதங்கள் மற்றும் பாரம்பரிய சடங்குகள் உள்ளன. அதில், ஒரு கிராமத்தில் உலகின் மிக கொடிய விஷம் கொண்ட இந்திய நாகப் பாம்புகளுடன் மக்கள் வாழ்கின்றனர். அந்த பாம்புகள் இவர்களை தாக்குவதில்லை.

Also Read : பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் அந்த பாம்புகளுடன் விளையாடி மகிழ்வது மிகவும் விசித்திரமாக உள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் நடைபெறுகிறது. இங்கு மக்கள் பாம்புகளை வழிபடுவதோடு, அவற்றிற்கு தனி அறைகள் உருவாக்கி, வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

இந்த பாம்புகளை குடும்ப உறுப்பினர்களாகக் கருதுகிறார்கள். மேலும் குழந்தைகள் அவற்றுடன் விளையாட அனுமதிக்கிறார்கள். பாம்புகளும் குழந்தைகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடுகின்றன.

வீடு கட்டும் போது, நாகப் பாம்புகளுக்காக தனி அறை ஒதுக்கப்படுகிறது. நாகப்பாம்புகள் கிராம மக்களுடன் இணக்கமாக வாழ்வது எப்படி என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Recent Post