சத்துக்கள் குறையாமல் இருக்க சூப் இப்படித்தான் தயாரிக்க வேண்டும்

சூப் என்பது காய்கறி, கீரைகளில் உள்ள சாறுகளை அளவாக 2-3 கொதிகளில் தயாரிக்க வேண்டும். சூப் செய்யும் போது முதலில் தண்ணீர் அல்லது பருப்பு வெந்த நீரை கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்தவுடன், மிளகு, பூண்டு, காய்கறிகள் கீரைகள் போன்றவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்தவுடன், அதாவது சூப் பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்துமல்லி, இந்துப்பு சேர்த்து மூடி விடவும். 5 நிமிடம் குழித்துப் பருகவும், சத்துக்கள் குறையாத சூப் இது.

பருப்பு வெந்த நீர், பாரம்பரிய அரிசிகளைக்களைந்த நீர், அல்லது கேழ்வரகுப்பால், கேழ்வரகு மாவு போன்றவற்றைச் சேர்த்தால் நம்ம ஊரு சூப்பும் திக்காக இருக்கும். தேவைப்பட்டால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். மண்பாத்திரத்தில் செய்தால் சூப்பின் சுவையும் மணமும் இன்னமும் கூடுதலாக இருக்கும்.

மலச்சிக்கல், கல் அடைப்பு, உடல் பருமன், அஜீரணம் உள்ளவர்கள், மெல்ல முடியாதவர்கள், பல் இல்லாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கும் சூப் ரொம்ப ரொம்ப ஏற்றது.

ஒவ்வொரு நாளும் பல காய்கள், பல கீரைகள், பல மூலிகைகள் கொண்டு சூப் தயாரித்து தொடர்ந்து பருகி வர, முடி உதிர்தல் குறையும், முகம் பொலிவு பெரும். மேனி பளபளப்பாகும்.

Recent Post

RELATED POST