மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வரலாம். இதனால் மனம் லேசாகும்.
“ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”
தினமும் காலையில் குளித்து விட்டு இறைவனை வணங்கிய பிறகு ‘ஸ்ரீ சாய்பாபா’வை வணங்கி அவரின் திரு உருவத்தின் முன் நின்று இந்த மந்திரத்தை 9 முறை கூற வேண்டும்.
வியாழக்கிழமைகளில் சாய்பாபா கோயிலில் அல்லது வீட்டிலேயே அவரின் திரு உருவம் முன் நின்று வணங்கி, முந்திரி பருப்பு அல்லது கற்கண்டு நிவேதனமாக வைத்து பூஜிக்க வேண்டும். பிறகு இந்த மந்திரத்தை 108 முறை பக்தியுடன் கூறவேண்டும்.
இவ்வாறு செய்வதால் மன பயம் நீங்கும். மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். அத்துடன் செல்வ வளமும் பெருகும்.
தினமும் பாபாவின் படத்துக்கோ சிலைக்கோ பூஜை செய்யுங்கள். பாபாவின் மூல மந்திரத்தைச் சொல்லுங்கள்.
பாபாவின் மூல மந்திரம்
“ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி”
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள். இதனால் உங்கள் குடும்பத்தில் விரைவில் நல்லது நடக்கும்.