மணத்தக்காளி சூப் செய்வது எப்படி?

  • மணத்தக்காளிக் கீரை – 2 கப்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • பூண்டு – 3 பல்
  • தேங்காய்ப்பால் – ஒரு கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • மிளகுத்தூள் – சிறிதளவு
  • எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள் வெங்காயம் பூண்டு போன்றவற்றை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு கீரையும் சேர்த்து வதக்கி, இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் தேங்காய்ப் பாலை கலந்து பரிமாறலாம்.