மாம்பழத்திற்கு “மாம்பழம்” என்ற பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் Mango என போர்ச்சுகீசியர்கள் பெயர் வைத்தனர். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர்கள் இந்திய மாம்பழங்களைச் சுவைத்தனர். அதனால் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அல்போன்சா மற்றும் மல்கோவா மாம்பழங்கள் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. இன்று உலக 1000 வகையான மாம்பழங்களை ஏற்றுமதி செய்து அறிமுகப்படுத்தியவர்களும் அவர்கள்தான். ஆண்டு முழுவதும் பசுமையான தோற்றத்தில் இருப்பது மாமரம். கோடை காலத்தின்போது வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க அதிகரிக்க, மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும். இன்று உலகத்தில் ஆயிரம் வகையான மாம்பழங்கள் உள்ளன.
பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில் விளைகிறது. இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் டி அதிகமாக உள்ளது. மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு அழைக்கலாம். மா, பலா, வாழை என முக்கனிகளில் முதலிடத்தை பிடிப்பது மாம்பழம் தான்.
எல்லோருடைய மனங்களிலும், இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம், உண்மையிலேயே பழங்களின் அரசன் தான். இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து வருகின்றனர் ஆனால் ஐரோப்பியர்களுக்கு இந்த சுவையான செய்தி கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும்.