மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்று புண் உள்ள இடத்தில் தடவினால் சேற்றுப்புண் ஆறிவிடும். இதனை தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் செய்ய வேண்டும்.
மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள், கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலில் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டினால் ஒரு வாரத்தில் குணமாகும்.
மருதாணி இலையை அரைத்து தலையில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
மருதாணியின் வேரை நசுக்கிப் பிழிந்து சில துளிகள் காதில் விட காது வலி குணமாகும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து தடவினால் உள்ளங்கால் எரிச்சல் சரியாகும்.
நல்லெண்ணெய்யை சுடவைத்து அதில் மருதாணி இலைகளை போட்டு இறக்கி ஆற வைக்க வேண்டும். அந்த இலைகளை சுத்தமான துணியில் வைத்து புண்ணின் மீது வைத்து கட்டினால் புண்கள் விரைவில் குணமாகும்.
இருக்கமாக உடை அணிவதால் சிலருக்கு இடுப்பு பகுதியில் கருப்பாக தோன்றும். அவற்றை சரி செய்ய மருதாணி, மஞ்சள், அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பூசி வந்தால் அந்த கருமை மறையும்.
மருதாணி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்கள் தீரும்.
இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் மருதாணி மலர்களை தலையணையில் வைத்துக் கொண்டு தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.
மருதாணி இலையுடன் நிலாவாரை இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், தலை முடியின் செம்பட்டை நிறம் மாறும்.
மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்துக்கொள்வதால் உடல் வெப்பம் தணியும். நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். மருதாணி வைத்துக் கொள்வதால் மன நோய் ஏற்படுவது குறையும்.