புற்று நோயை விரட்டும் மாதுளம் பழம்

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினம் ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் போதும் என்ற வரிசையில் தினமொரு மாதுளை பழம் எடுத்துக்கொண்டால் போதுமென்ற அளவிற்கு அதிக சத்துக்களை கொண்டுள்ளது.

மாதுளை பழத்தில் இருக்கும் புனிகாலஜின்ஸ் என்ற பொருள் ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட் போல செயல்பட்டு இதயத்தை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

அத்தகைய மகத்துவமான மாதுளை பழத்தின் மருத்துவ பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

Advertisement
mathulai in tamil

புற்று நோய்

மாதுளைப்பழத்தில் எல்லாஜிக் அமிலமும், வைட்டமின் சி யும் அதிகம் இருப்பதால் பெருங்குடலில் புற்றுநோய் பரவாமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் இருப்பவர்கள் 2 பெரிய மாதுளை பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. சிறியதாக இருந்தால் மூன்று எடுத்துக் கொள்ளலாம்.

தூக்கமின்மை

சிலர் இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவார்கள். அவ்வாறு உள்ளவர்கள் தூங்கும் முன்பு மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள இரும்பு சத்தினை உடல் உடனடியாக உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் சி உதவுவதால் நரம்பு மண்டலம் அமைதியாகி ஆரோக்கியமான தூக்கத்தை தருகிறது.

செரிமானக் கோளாறு

சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள், உணவிற்கு முன் ஒரு டம்ளர் மாதுளை பழச்சாறு அருந்திவிட்டு பிறகு சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகி வெளியேறிவிடும். குடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தப்படுத்தி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இதயத்தை பாதுகாக்கும்

இதயம் நன்றாக ஆரோக்கியமாக வேலை செய்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வாழ்நாளும் அதிகமாக இருக்கும். மாதுளைப்பழத்தில் உள்ள கால்சியம் சத்து இதயத்தின் தசைப் பகுதிகள் வலுவுடன் செயல்படுவதற்கு உதவுகிறது. தினமொரு மாதுளை எடுத்துக்கொள்வதன் மூலம் இதயத்திற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றன.

பித்த வாந்தி, பேதி

மாதுளை பழத்திலுள்ள இனிப்பு சுவையும், புளிப்பு சுவையும் பேதிக்கு சிறப்பான மருந்தாகும். மலத்துடன் ரத்தம் வெளியேறுகிறது என்றால் 50 மில்லி மாதுளை பழச்சாறு எடுத்துக் கொண்டால் போதும். இதிலுள்ள துவர்ப்பு சக்தி இப்பிரச்சினையை கட்டுப்படுத்தி தீர்வு கொடுக்கும்.

பித்த வாந்தி ஏற்படும் பொழுது 100 மில்லி அல்லது 50 மில்லி மாதுளை பழ சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும். தேவையின்றி உடலில் இருக்கும் பித்தநீர் வெளியேறிவிடும்.

பற்கள் பாதுகாப்பு

மாதுளை பழத் தோலை நன்றாக உலர்த்தி பொடியாக்கி அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியினை பயன்படுத்தி தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் ஈறுகள் வலுவாகும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பல் வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.

மாதவிலக்கு

மாதவிலக்கு காலங்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து எலும்பு தேய்மானம், மூட்டு வலி உருவாக வாய்ப்புண்டு. இந்த சமயத்தில் பெண்கள் தினமும் மாதுளை பழச்சாறு அருந்தி வந்தால் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்து உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும்.

மன அழுத்தத்தை போக்கும்

சிலருக்கு வேலைப்பளுவால் அல்லது வேறு ஏதோ ஒரு காரணங்களால் மன அழுத்தம் அதிகமாகிறது. இந்த சமயத்தில் உடலில் நைட்ரிக் ஆக்சைடு என்ற தனிமம் குறைகிறது. இதற்கு தீர்வாக மாதுளம்பழத்தை சாப்பிட்டால் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

முடி வளர உதவும்

தற்போதைய இளைஞர்களின் பிரச்சனை தலையில் முடி கொட்டுவது தான். முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க தினமும் மாதுளை பழச்சாறு எடுத்துக் கொள்வது நல்லது. இது முடியின் வேர்களை உறுதியாக்கி, தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியமாக முடி வளர உதவுகிறது.

குழந்தைகளுக்கு

கர்ப்பிணி பெண்கள் மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுத்து, குழந்தையின் மூளையை நன்றாக வளர்ச்சி அடைய உதவுகிறது.

மாதுளையின் தீமைகள்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, ஆனால் சிலருக்கு மாதுளை பழம் சாப்பிடும்பொழுது அலர்ஜி, அரிப்பு, வீக்கம் போன்றவைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

இந்த சமயத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மாதுளை பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த பிரச்சனை அனைவருக்கும் ஏற்படாது. ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.