சர்வாங்காசனம் செய்து முடித்த பிறகு மத்ஸ்யாசனம் செய்தால் இதன் பலனை நன்கு முழுவதும் அடைய முடியும். பத்மாசனம், சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம் இம்முன்று ஆசனங்களை பழக்கப்படுத்தி செய்வோருக்கு எந்தவிதமான பிணிகளும் வராது.
மத்ஸ்யாசனம் செய்முறை
தலைவிரிப்பில் அமர்ந்து பத்மாசனம் போடவும். பின்னர் முழங்கைளை ஊன்றி பின்னால் தரையில் சாய்ந்து படுக்கவும். சுவாசத்தை வெளிவிட்டுக் கொண்டே கைகளின் உதவியால் முதுகை மேலே தூக்கி தலையைப் பின்புறமாக வளைத்து தரைவிரிப்பில் ஊன்றி நிற்கச் செய்யவும்.
பின் இரு கைகளாலும் இருகால் பெருவிரல்களையும் பிடித்துக் கொள்ளவும். சுவாசத்தைச் சீராக்கிக் கொள்ளவும். முதலில் ஐந்து வினாடிகள் இந்நிலையில் நீடிக்கலாம்.
பழகப் பழக ஐந்து நிமிடங்கள் நிற்கலாம். இதுவே மத்ஸ்யாசனம் ஆகும். மத்ஸ்யாசனம் செய்யும்போது உமிழ்நீரை வீழுங்கக் கூடாது.
மத்ஸ்யாசனத்தின் பலன்கள்
- நரம்பு வீரியம் பெறும்.
- இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
- உற்சாகம் பெருகும்.
- கால்கள் வலுப் பெறும்.
- முதுகு வலுப் பெறும்.