மயோனைஸ் என்ற உணவுப் பொருள் எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது..? அதனை சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும்..? என்பது தொடர்பான தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.
மயோனைஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
துரித உணவு வகைகளோடு, சேர்த்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்று மயோனைஸ். இந்த பொருளை, பீசா, பர்கர், க்ரில் சிக்கன் போன்ற பல்வேறு பொருட்களோடு, சேர்த்து சாப்பிட்டு வருகின்றனர். இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று பலருக்கும் தெரியாது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு.
மயோனைஸ் செய்வதற்கு, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சை சாறு, உப்பு, எண்ணெய் போன்றவை தேவைப்படுகிறது. இந்த பொருட்கள் மட்டுமின்றி, கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, சில மூலப்பொருட்களையும், உணவகம் நடத்தி வருபவர்கள் பயன்படுத்துகின்றனர்.
மயோனைஸ் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
மயோனைஸ் உணவுப் பொருளில், பாக்டீரியாக்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் மயோனைஸை தயாரித்து சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்காமல் இருந்தால் ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்துவிடும். ஆகவே இது உடலுக்கு ஆபத்தானது. எனவே கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, உணவகத்தினர் சில மூலப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனாலும், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
எந்தவிதமான நோய்கள் ஏற்படும்?
இதனை அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இதில் சேர்க்கப்படும் எண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும். ஆகவே இது ஆபதனாது.
உடல்நலனை கருத்தில் கொண்டு வாழ்பவர்கள் யாரும், இந்த மயோனைஸ் உணவுப் பொருளை குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துங்கள்.