புதினா சமையலுக்கு வாசனை தரும் பொருளாக உள்ளது. கொத்தமல்லி, கருவேப்பிலை போல புதினாவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதினா வெறும் வாசனைப் பொருள் மட்டுமல்ல. நல்ல மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகிறது.
இது கீரை வகையைச் சேர்ந்தது இதில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளது. இதனை துவையலாக அல்லது உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
அரை லிட்டர் தண்ணீரில் புதினாவை 3 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் பல நோய்கள் குணமாகும்.
இதய சம்பந்தமான நோயுள்ளவர்கள் புதினாவை துவையல் அல்லது கசாயம் செய்து குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
சில குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும். அவர்களுக்கு புதினாவை சுத்தம் செய்து கசாயம் தயாரித்து அதில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொடுத்தால் போதும். வாந்தியும் வயிற்றுப்போக்கும் நின்றுவிடும்.
பெண்கள் அடிக்கடி புதினாவை உணவில் சேர்த்து வந்தால் மாதவிலக்கு கோளாறு நீங்கும்.
அசைவ உணவு சாப்பிடும் சிலருக்கு உணவு எளிதில் ஜீரணம் ஆகாமல் இருக்கும். அவர்கள் புதினாவை துவையலாக தயார்செய்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.
புதினாவை துவையல் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும். புதினா இலையை சுத்தம் செய்து சீரகம் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு குணமாகும்.