எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் இயற்கை மருந்துகள் என்ன?

எலும்புருக்கி நோயின் காரணமாகத் தொண்டையில் அடிக்கடி சளி வந்து அடைத்துக் கொண்டு குரல் கம்மும். இதனை போக்கிட வல்லாரையையும் தூதுவேளையையும் சமபங்கு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனை காய்ச்சிய பாலில் கலந்து உட்கொள்ள வேண்டும்.

இலவங்கப்பூவுடன் மகரப்பூ, குங்குமப்பூ, சிறு நாகப்பூ, அஸ்வகந்தி ஆகியவைகளைச் சமஎடை எடுத்து நன்கு சுத்தம் செய்து, பின்னர் அதிமதுரக் கஷாயத்தைக் கொண்டு நன்றாக அரைத்து, மிளகின் அளவுக்கு உருட்டி நிழலில் காய வைத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு வேளைக்கு இரண்டு உருண்டை வீதம் காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய் குணமாகும்.

மயில் மாணிக்கத்தின் இலையை அரைத்துத் தயிருடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர காசநோய்கள் குணமாகும்.

மாதுளை வேரைச் சுத்தம் செய்து கஷாயமாக காய்ச்சிப் பாதியளவாக வற்ற வைத்துக் காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து ஒரு மண்டலம் உட்கொள்ள எலும்புருக்கி நோய் குணமாகும்.

எலும்புருக்கி நோயைக் குணப்படுத்த கற்றாழை சோற்று எண்ணெய் (குமரி எண்ணெய்) நல்ல மருந்தாகும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு எலும்புருக்கி நோயைக் குணப்படுத்த உதவும்.

சீந்தில் கொடியைச் சதைத்துக் கஷாயம் வைத்துப் பருகுவதன் மூலம் எலும்புருக்கி குணமாகும்

எலும்புருக்கி நோயுள்ளவர்கள் தினமும் நான்கு பேரீச்சம் பழங்களை உட்கொண்டு காய்ச்சிய பசும்பாலையும் பருகி வர வேண்டும்.

எலும்புருக்கி நோயைக் குணப்படுத்த வில்வம் பழம் நல்ல மருந்தாகும்.

மலை நெல்லிக்காய என போற்றப்படும் நெல்லிக்கனியை உன்பதன் மூலம் காசநோயை போக்க மூடியும்.

தூதுவளையை துவையலாக செய்து சாப்பிட்டுவந்தால் நல்ல பலனளிக்கும்.

கொய்யா இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் காசநோயால் ஏற்படும் வாந்தி, பேதி குணமாகும்.

காச நோய்க்கு உலர்ந்த திராட்சை சிறந்த உணவாகும். இது ரத்த ஓட்டத்தை சீராக இயங்கவைக்கும்.

Recent Post

RELATED POST