பெரிய நெல்லிக்காயைத் துருவி காபி பொடி போல் செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
அதேபோல் நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது.
கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாத விலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
செம்பருத்திப் பூ மாத விலக்கை ஏற்படுத்தக்கூடியது. தகுந்த வயது வந்தும் பூப்பெய்யாத பெண்கள் செம்பருத்திப் பூவை உண்டு வந்தால் பூப்பெய்யலாம்.
வெள்ளைப்பூண்டை தோல்நீக்கி வேகவைத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம் பூ தலா 200 கிராம் எடுத்துப் பொடிக்கவும். 5 கிராம் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வந்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும்.