முன்னுரை:-
நெய்யில் என்னென் நன்மைகள் இருக்கிறது, அதனை எவ்வாறெல்லாம் சாப்பிட வேண்டும், நெய்யில் இருக்கும் சத்துகள் என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இந்த தொகுப்பு.
விளக்கம்:-
நெய்யில் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை சேர்க்கும் மிகப்பெரிய நன்மை இருக்கிறது. சுத்தமான நெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாழ்க்கை ஆரோக்கியமானதாக மாறும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதனால் தான் சூடாக சாப்பிடும்போது நெய் ஊற்றி சாப்பிடும் பழக்கமே நம்மிடம் இருக்கிறது. தற்போது நெய்யின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
பயன்கள்:-
1. வெதுவெதுப்பான தண்ணீரில் நெய்யை ஊற்றி குடித்து வந்தால், உடலில் இருக்கும் வெள்ளை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால், நோய் நம்மை எளிதில் தாக்கிவிடாது.
2. நெய் மற்றும் மஞ்சளை வெந்நீரில் போட்டு குடித்து வந்தால், வரட்டு இருமல் குணமடைந்துவிடும்.
3. நெய் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கும் தன்மை கொண்டது.
4. காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவது, உடலுக்கு வலுவை தரும். மேலும், எலும்பின் மூட்டுகளும் நல்ல ஸ்டராங்காக மாறும்.
5. தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக நெய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.