பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

ஒவ்வொரு கனவுக்கும் ஒருவித பலன்கள் உண்டு. அந்த வகையில் பால் சார்ந்த பொருட்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

உங்கள் கனவில் சுத்தமான பாலை கண்டால் அது உங்களின் ஆரோக்கிய மேம்பாட்டைக் குறிக்கிறது.

நீங்கள் பால் குடிப்பது போல கண்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான பாதை திறக்கப் போகிறது என்று பொருள்.

பால் பொங்குவது போல கனவு வந்தால் அது நல்லதல்ல. அதனால் சில புதிய பிரச்சனைகளை உங்கள் வாழ்க்கையில் வரலாம்.

பால் கொதிப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு விரைவில் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். உங்களின் நீண்ட கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பால் சாதம் சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்களின் எந்த ஒரு புதிய திட்டங்களும் நிறைவேறும். அதன் மூலம் எதிர்காலத்தில் நனமை தரும் என்று பொருள்.

பால் வாங்குவது போன்று கனவில் கண்டால் அது உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

மோசமான பாலை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்கள் உறவினர்கள் மூலமாக உங்களுக்கு தொல்லைகள் ஏற்பட போகிறது என்று பொருள்.

தரையில் பால் கொட்டுவது போல கனவு வந்தால் ஒரு சில விஷயங்களில் உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

Recent Post