சுவை மிகுந்த மில்க் கேசரி – எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய்- 7
வெள்ளை ரவை – 100 கிராம்
கிஸ்மிஸ்(உலர் திராட்சை) – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு – 2
பிஸ்தா – 2
செர்ரி பழம் – 2
நெய் – 30 மில்லி
முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

மிதமான தீயில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு ரவையை லேசாக வறுத்துக்கொள்ளவும்.

பிறகு அதே வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். அதில் வறுத்த ரவை, ஏலக்காய் போட்டு கிளறவும்.

கேசரி பதத்திற்கு வந்த பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறவும்.

பிறகு பாதாம் பருப்பு,பிஸ்தா, செர்ரி ஆகியவற்றை வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறலாம்.

Recent Post

RELATED POST