குரங்கு அம்மை அறிகுறிகள் என்ன? யாரை தாக்கும்?

கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் நுழைந்து விட்டது.

குரங்கு அம்மை என்பது ஒரு வகையான அம்மை நோய் குரங்குகளிடமிருந்து பரவிய அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியது. இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உடல் தளர்ச்சி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்புளங்கள், தலைவலி, உடல் சோர்வு, தொண்டை புண், இருமல், கண் வலி அல்லது கண் பார்வை மங்குதல், மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை இந்தநோயின் அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகளுக்குப் பிறகு குரங்கு அம்மை நோய் 6 முதல் 13 நாட்களில் தீவிரமடையலாம். இந்த நோய் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் என சுகாதார நிறுவனர்கள் கணித்துள்ளனர்.

யாரை தாக்கும்?

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பாலிய தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள்ளும் நபர்கள் இவர்களுக்கு இந்த நோய் எளிதாக தாக்கும் எனக் கூறப்படுகிறது.

நீங்கள் செய்யவேண்டியது என்ன?

குரங்கு அம்மை அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வளர்ப்பு பிராணிகள் உட்பட விலங்குகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

தனிமனித இடைவெளியே கடைபிடித்தல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தொடாமல் இருத்தல், முக கவசம் அணிதல் என கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

Recent Post

RELATED POST