மூக்கிரட்டை கீரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூப்பில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது.
புற்று நோய்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை அழிக்கும். தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும்.
மூக்கிரட்டை கீரை சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.