உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மூங்கில் அரிசி

நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கில் மரங்களில் மட்டுமே பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும்.

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த சத்துக்கள் நிறைந்த மூங்கில் அரிசியும் முக்கியமான காரணம். மூங்கில் அரிசி பச்சை நிறம் கொண்டது. இனிப்பு சுவை கொண்ட மூங்கில் அரிசி உறுதியானது மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

நமது உடலில் தோன்றும் வாத, பித்த, போன்றவைகளை சரி செய்து, உடலில் உள்ள நச்சுக்களையும் இந்த அரிசி நீக்குகிறது. இந்த அரிசி கேரளா மற்றும் அஸ்ஸாம் காடுகளில் அதிகம் விளைகிறது.

ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரசத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், போன்ற உடலுக்கு தேவையான கனிமசத்துக்கள் நிறைந்துள்ளது.

மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

குழந்தைபேறு உருவாக்குவதில் மூங்கில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. அதிக பசி ஏற்படாமல் தடுக்கும். இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும்.

Recent Post