காலை எழுந்தவுடன் என்ன குடிக்கலாம்?

காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் முழு உடலுக்கும் நன்மை பயக்கும். இது உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

காலை எழுந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் 2 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

தண்ணீருக்குப் பதிலாக முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை நீருடன் குடிக்கலாம்.

அருகம்புல் சாறு அல்சர் நோயாளிக்கு ஏற்ற பானம். அருகம்புல்லை நாமே வீட்டில் அரைத்துச் சாறு எடுத்து வெந்நீருடன் பருகுவது நல்லது.

வெள்ளைப்பூசணி சாறு குடித்தால் தொப்பை, ஊளைச் சதை குறையும். சிறிது மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த் துக் கொண்டால் முழுபலன் பெறலாம்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடித் தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக் குறையும். நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

நெல்லிச்சாறு உடலில் உள்ள தேவை யற்ற கொழுப்பினை அதிகரிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

இளநீர் இயற்கை தந்த வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலுக்கு தேவையான அனைத்து மினரல்களும் இதில் உள்ளது.

Recent Post

RELATED POST