கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை நுரையீரலை பாதிக்குமாம்..!

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் மாலை நேரம் ஆனவுடன் கொசுக்கள் வர தொடங்கிவிடும். இதனால் இரவில் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுகிறோம்.

இந்த கொசுவை ஒழிப்பதற்காக கடைகளில் கொசுவர்த்தி, மேட், கிரீம் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துகிறோம் அவற்றை பயன்படுத்துவதால் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு அதிகமாகும். குறிப்பாக கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை 100 சிகரெட்டுகளுக்கு சமம் என தெரியவந்துள்ளது.

கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை கொசுவை மட்டுமல்ல, நமது நுரையீரலையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது. இரவு முழுவதும் தூங்கும் போது அந்த புகையை நாம் சுவாசித்து கொண்டே இருப்பதால் உடலுக்கு செல்ல வேண்டிய நல்ல ஆக்ஸிஜன்கள் தடைபடுகிறது. மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால் நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு நுரையீரலை பாதிக்கிறது.

சிலர் மாலை நேரங்களில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தையும் அடைத்துவிட்டு இந்த கொசு விரட்டிகளை போடுகின்றனர். இதனால் வீட்டில் இருந்து சமைக்கும் போது வரும் புகை கொசுவிரட்டிகளிலிருந்து வரும் புகை என்று அசுத்தமான காற்று இருப்பதால் அதனை சுவாசிக்கும்போது ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. அதில் முதல் அறிகுறியாக சளி காய்ச்சல் ஏற்படுகிறது.

கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்று நோயை ஏற்படுத்தும் என்றும் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகிறது.

எனவே இந்த ஆபத்தான கொசுவர்த்திக்கு பதிலாக கொசுவலை பயன்படுத்துவது நல்லது.

Recent Post

RELATED POST