சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தங்கம் மாளிகையில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
அப்போது ஒரு ஜோடிக்கு துணை முதல்வர் தாலி எடுத்து மணமகளின் தாயிடம் கொடுத்தார். பதற்றத்தில் இருந்த தாய் தாலியை வாங்கி மணமகள் கழுத்தில் கட்டப் போனார். இதைப் பார்த்து ஷாக் ஆன உதயநிதி, “என்னம்மா நீங்க கட்டப்போறீங்க.. மாப்ளைக்கிட்ட கொடுங்க” என சிரித்தபடி கூறினார்.
இந்த நிகழ்வால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டு சிரித்தனர்.