வாயை திறந்து வைத்தப்படி குழந்தை தூங்குகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!

முன்னுரை:-

குழந்தைகள் வாய் வழியில் சுவாசிப்பதற்கான காரணங்கள் பற்றியும், அவ்வாறு வாய்வழியில் சுவாசித்தால் என்ன பிரச்சனை ஏற்படும் என்றும் இந்த கட்டூரையில் பார்க்கலாம்.

விளக்கம்:-

குழந்தைகள் சில நேரம் வாயை திறந்து வைத்தப்படி தூங்குவார்கள். மூக்கு வழி சுவாசம் தடைப்பட்டிருக்கும்போது தான் இவ்வாறு தூங்குவார்கள். மூக்கு வழி சுவாசம் எதன்காரணமாக நடைபெறுகிறது என்பது தற்போது பார்க்கலாம்.

வாய் வழி சுவாசத்திற்கான காரணங்கள்:-

1. சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், குழந்தைகளுக்கு மூக்கு வழி சுவாசம் தடைப்பட்டு, வாயின் மூலம் சுவாசிப்பார்கள்.

2. குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

3. குழந்தைகள் சுவாசிக்கும் பகுதியில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும், குழந்தைகள் வாய் வழியாக சுவாசிப்பார்கள்.

ஏற்படும் பாதிப்புகள்:-

எப்போதும் மூக்கு வழியாக சுவாசிக்கும்போது தான் உடலுக்கு நல்ல பயன்கள் கிடைக்கும். மூக்கு வழியாக சுவாசிக்கும்போது, காற்றை உள்ளே செல்வதற்கு முன் அதில் உள்ள தூசுக்கள், அழுக்குகள், பாக்டீரியாக்கள் வடிக்கட்டப்படுகின்றன.

ஆனால் வாய் வழியில் சுவாசித்தால், வடிகட்டப்படாமல், அப்படியே காற்று உள்ளே இழுக்கப்படும். உங்கள் குழந்தையோ, உறவினர்கள் அல்லது நண்பர்களின் குழந்தையோ அப்படி வாய் வழியில் சுவாசித்தால், இதுபற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

Recent Post

RELATED POST