வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வீட்டு மருத்துவம்

அகத்திக்கீரையுடன் வெங்காய சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து காலையில் குடித்து வர நாவறட்சி நீங்கும்.

கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும்.

ஒரு வெற்றிலையில், 2 கிராம்பு சேர்த்து மென்று, அதை பல்வலி உள்ள இடத்தில் வைத்துக்கொள்ள பல்வலி குணமாகும்.

சுடுதண்ணியில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

பல்வலி குறைய ஆரஞ்சு பழத்தோலை வாயில் போட்டு மென்று துப்பவும்.

துளசி, வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

உப்புக் கலந்த மோரை வாயில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு துப்பவும். இதேபோல் ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் வாய்ப்புண் நீங்கும்.

பாகற்காயை கசக்கி சொத்தைப்பல் மீது வைத்தால் வலி நீங்கும்.

வல்லாரை கீரையை இடித்து அல்லது நன்றாக அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

Recent Post

RELATED POST