தினமும் மவுத் வாஷை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

உடலின் மற்ற பகுதிகளைப் போலவே வாய் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க சிலர் மவுத்வாஷைப் பயன்படுத்துகின்றனர். இது வாய் துர்நாற்றத்துடன் தொடர்புடைய அனைத்து பாக்டீரியாக்களையும் கொன்று குளிர்ச்சியான புதிய சுவாசத்தை அளிக்கிறது.

இந்த மவுத்வாஷில் ஆல்கஹால் உட்பட பல பொருட்கள் உள்ளன. இது வாய் துர்நாற்றம், பாக்டீரியா மற்றும் வாய் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது. ஆனால் மவுத்வாஷை தினமும் பயன்படுத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மவுத்வாஷில் ஆல்கஹால் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனை தினமும் பயன்படுத்தும்போது உங்கள் வாயின் மென்மையான திசுக்களையும் சேதப்படுத்துகிறது. இதனால் வாய் புண் உருவாகும்.

குழந்தைகளுக்கு மவுத் வாஷை பயன்படுத்தக்கூடாது. இதில் அதிக அளவு ஆல்கஹால் இருப்பதால் குழந்தைகளின் மென்மையான பற்களை சேதப்படுத்தும்.

மவுத்வாஷை அதிகமாகப் பயன்படுத்துவது வாயை உலர வைக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Recent Post