தமிழர் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே இந்த கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
சீரகத்தை நெய்யில் வறுத்து அதனுடன் முளைக்கீரை,மிளகாய்வற்றல், தண்ணீர் சேர்த்து அவித்து அந்த சாற்றை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் எல்லா விதமான காய்ச்சல்களும் குணமாகும். முளைக்கீரை உடன் மிளகு சீரகம் பூண்டு சின்ன வெங்காயம் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மையை போக்கி நல்ல பசி உண்டாகும்
வயதானவர்கள் இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.