சுவாசத்தை பாதுகாக்கும் முள்ளங்கி கீரையின் மருத்துவ பயன்கள்

மற்ற கீரை வகைகள் போலவே முள்ளங்கி கீரையிலும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌.

முள்ளங்கி கீரையில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A,B,C அதிகம் உள்ளது. முள்ளங்கியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு ‘வைட்டமின் C’ முள்ளங்கி கீரைகயில் இருக்கிறது.

இந்த கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கி கீரை நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். மேலும் இது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.

சிறுநீரக நோய்கள், மஞ்சள் காமாலை கல்லீரலில் பிரச்சனைகளுக்கு முள்ளங்கி கீரை சிறந்த மருந்து.

இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது முள்ளங்கி கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும்.

முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் நன்றாக பிரியும்.

முள்ளங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை வீக்கம், சிறுநீர் கல்லடைப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கி கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் கொழுப்பு படிவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

முள்ளங்கி கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்து வருபவர்களுக்கு கண்களில் எந்தவித பாதிப்புகள் வராமல் தடுக்கும். கண் பார்வையை மேம்படுத்தும்.

சுவாசிக்கும் போது காற்றில் கண்ணனுக்கு தெரியாத சில நுண்கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும். அதனை, வெளியேற்ற முள்ளங்கி கீரையை சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கும்.

முள்ளங்கிக் கீரையில் கால்சியம் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

Recent Post

RELATED POST