முருங்கைக் கீரையின் பயன்கள் என்ன?

உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் கீரை வகைகளில் முருங்கைக்கீரையும் ஒன்று. மேலும், இது நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். முருங்கை இலை அல்லது முருங்கைக்கீரை என்று அழைக்கப்படும் இதனின் பயன்கள் பற்றி பார்ப்போம்.

மலச்சிக்கலைப் போக்கும்

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு சரியாக வெளியேறினால்தான் உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். உடலில் நீர் வற்றுவதால்தான் இந்த சிக்கல் ஏற்படுகிறது. முருங்கை கீரையை வேகவைத்து அந்த சாற்றினை குடித்து வர மலச்சிக்கல் தீரும்.

கை கால் வலி நீக்க உதவும்

கடினமான வேலை பார்த்த பிறகு நமது உடல் வலி சிலருக்கு அதிகமாக வலி இருக்கும். இந்த சமயத்தில் முருங்கை கீரையை சேர்த்து, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் சோர்வும், வலியும் நீங்கும்.

மலட்டுத்தன்மையை நீக்கும்

நமது தற்போதைய உணவு முறையால் சில நேரங்களில் சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. முருங்கை கீரையை நன்றாக வேக வைத்து அதனை அடிக்கடி இருபாலரும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.

ரத்த சோகையை நீக்கும்

ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவதால் ரத்த சோகை உருவாகிறது. அதற்கு முருங்கை கீரையை நெய்யில் வதக்கி அதனை சாப்பிட்டு வந்தால், நல்ல இரத்தத்தை உருவாக்கும். ரத்த சோகையைப் போக்கும். உடல் பலம் பெறும்.

பற்கள், ஈறுகள், வாய்ப்புண்

அடிக்கடி முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஈறுகள் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது. உடல் சூட்டால் ஏற்படும் வாய்ப்புண் சரியாகும்.

இரும்புச்சத்து

உடலுக்கு இரும்புச் சத்து என்பது மிக மிக முக்கியம். அடிக்கடி முருங்கை கீரையை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை அளிக்கிறது. குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.

தலைமுடியை பாதுகாக்கும்

முருங்கை கீரையில் புரதச்சத்தும், வைட்டமின்களும் அதிகமாக உள்ளன. இதனால் அடிக்கடி முருங்கை கீரை எடுத்துக்கொண்டால் தலைமுடி உதிர்வையும், முடி நரைப்பதையும் இது தடுக்கும்.

தோல் வியாதியை போக்கும்

முருங்கை கீரையில் தோல் சம்பந்தமாக ஏற்படும் குறைபாடுகளை போக்கும் வைட்டமின்களும், புரத சத்துக்களும் இதில் உள்ளன. கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் தோல் சுருக்கம், தோல் சம்பந்தமான வியாதி போன்றவைகள் வராது.

தாய்ப்பால் சுரக்க உதவும்

குழந்தை பிறந்து 6 மாதம் வரைக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் உணவு. தாய்மார்கள் முருங்கை கீரையை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

சுவாச பிரச்சினையை போக்கும்

தூசி, சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் சுவாசிப்பதற்கு சிலருக்கு சிரமமாக இருக்கும். அப்படி இருக்கும் நபர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரை சூப் செய்து மிதமான சூட்டில் தினமும் குடித்துவர சுவாசப் பிரச்சனை நீங்கும்.

Recent Post