ரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்த செல்களை உருவாக்கும் காளான்

கத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, முருங்கை போன்ற காய்கறிகளை நாம் அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகளை பயன்படுத்தும் அளவுக்கு காளானை பயன்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் காளானை ஒரு காய்கறியாக கண்டுகொள்வதுமில்லை. காளானில் உள்ள நன்மைகளை இப்போது பார்ப்போம்.

காளான் ரத்தத்தை சுத்தப்படுத்தும். புதிய ரத்த செல்கள் உருவாக காளான் என்னும் அறிய காய்கறி உதவுகிறது. காளானை காய்கறியாகவும், மூலிகையாகும் போற்றுகின்றனர். ஆனால் இது நாய்க்குடை (காளான்) வகையைச் சேர்ந்ததாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவாகவும், மருந்தாகவும் காளான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகில் 14 ஆயிரம் வகை காளான்கள் வளர்கின்றன. இவற்றில் 3000 வகை காளான்கள் உண்ணத்தக்கவை. 700 வகை மருத்துவ குணம் நிரம்பியவை. ஒரு சதவீத காளான் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. ஆப்பிள், திராட்சை, நெல்லிக்கு அடுத்து இளமையை பாதுகாக்கும் அரிய உணவு காளான். வாரத்திற்கு மூன்று வேளை காளான் சூப் அருந்தி வந்தால் புற்றுநோய் குணமாகும்.

ஜப்பானிலும் சீனாவிலும் புற்றுநோயாளிகள் குறைவு. காரணம் இவர்கள் காளான் உணவு பிரியர்கள். காளானில் இயற்கையாக அமைந்துள்ள மருத்துவ பொருட்கள் வாழ்நாளில் அச்சுறுத்தும் முக்கிய நோய்களை குணமாக்குகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருந்துகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான ஆரோக்கிய பானங்களிலும் காளானில் உள்ள முக்கிய சத்துக்களை பிரித்து எடுத்து அவற்றில் சேர்த்து தயாரிக்கின்றனர்.

காளானில் 80 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மாவுச் சத்தும் இதில் குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோடியம் உப்பும், கொழுப்பும் குறைவாகவே உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் தினமும் காளான் சூப் சாப்பிட்டு வந்தால் நல்லது.

Recent Post

RELATED POST