கோபத்தை குறைக்கும் முஷ்டி முத்திரை..செய்வது எப்படி?

கோபத்தை படிப்படியாக குறைத்து பிறகு முழுமையாக கோபத்தை அழிக்கும் ஒரு முத்திரைதான் இந்த முஷ்டி முத்திரை. இதை எப்படி செய்வது இதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

தரையில் விரிப்பு விரித்து கிழக்குதிசை நோக்கி, பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும்.

இப்போது படத்தில் உள்ளபடி உங்கள் கட்டைவிரலை தவிர மற்ற நான்கு விரல்களையும் இறுக்கமாக உள்ளங்கையில் படுமாறு வைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். அனைத்து விரல்களையும் இறுக்கமாக வைத்து இம்முத்திரையைச் செய்யவும்.

இந்த முத்திரையை தினமும் பத்து நிமிடங்கள் செய்யலாம். காலை, மதியம், மாலை மூன்று வேளையும் செய்யலாம். இதனால் கோபம் குறைந்து மனது நிம்மதி அடையும். நம் உடல் பாதுகாக்கப்படும். மேலும் இந்த முத்திரை அஜீரணக் கோளாறுகளை நீக்குகின்றது. உடல் அசதியை நீக்கி சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தருகின்றது.