நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? உங்கள் நகம் சொல்லிவிடும்

நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? நலம் என்றால் மிகவும் சந்தோஷம், ஆனால் நீங்கள் உண்மையிலேயே நலமாக இருக்கிறீர்கள் என்றால், அதனை உங்கள் நகம் வழியாக தெரியும். அது எப்படி?

ஒரு முறை இரு கைகால் நகங்களை கூர்ந்து கவனித்தாலே உடல்நலத்தை துல்லியமாக கூறிவிடலாம் என்று என்கிறார்கள் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள்.

குறிப்பு: உங்கள் நகங்களில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் தாங்களாகவே மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது

நகத்தில் வெள்ளை புள்ளிகள்

நகத்தில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் வைட்டமின் குறைபாடு என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் இது தவறு, நகத்தில் ஏற்படும் காயம் காரணமாகவே வெள்ளை புள்ளிகள், கோடுகள் உருவாகிறது. நகத்தை பராமரிக்கிறேன் என்ற பெயரில் அதிகமாக அழுத்தம் கொடுப்பதும் ஒரு காரணமாக அமைகிறது. இதற்க்காக அதனை நீக்கவோ, அழுத்தி விடவோ, வெட்டவோ கூடாது.

வெளிறிய நிற நகங்கள்

உங்கள் நகங்கள் வெளிறி இருந்தால் கல்லீரல் நோய் இருக்க வாய்ப்புகள் அதிகம் குறிப்பாக கல்லீரல் வீக்கமாக கூட இருக்கலாம். மேலும் உங்களுக்கு ரத்த சோகை இருப்பதையும் இந்த வெளிரிய நாகங்கள் உணர்த்தும்.

அதோடு சேர்த்து வெள்ளை கோடுகள் தெரிந்தால் உங்கள் ரத்தத்தில் புரதசத்து குறைவாக இருக்கிறது என்பதை உணர்த்தும். வெள்ளை கோடுகள் வளர்ந்து கொண்டே வந்தாள் ரசாயன விஷத்தன்மை உங்களிடம் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

பாதி இளம்சிவப்பு, பாதி வெள்ளை

இப்படிச் சரிபாதி நிறமாக இருந்தால், அது சிறுநீரக கோளாறு அறிகுறியாக இருக்கலாம். நீண்ட நாளாக உள்ள சிறுநீரக கோளாறு அடையாளமாக இருக்கலாம். சிலருக்கு நகத்தின் மேல் பகுதியில் இரண்டு நிறங்கள் கலந்த நிலையில் கூட இருக்கலாம்.

தடித்த நகங்கள்

இது நுரையீரல் நோய் இருப்பதன் அறிகுறி நுரையீரல் புற்று நோயின் அடையாளமாக கூட இருக்கலாம்

நீல நிற நகங்கள்

ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலோ அல்லது பிறவியிலேயே இதய நோய் இருந்தாலோ தோலின் நிறம் நீலம் கலந்து காணப்படும் இதுதான் நகங்களிலும் பிரதிபலிக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு முன்பு டாக்டர்கள் நெயில்பாலிஷ் அகற்ற சொல்வார்கள். காரணம், உடலில் இருந்து எவ்வளவு ஆக்சிசன் பம்ப் செய்யப்பட்டுள்ளது என்பது விரல் நகத்தின் வாயிலாக டாக்டர் அறிந்து கொள்வார்கள்

தேக்கரண்டி போன்று வளைந்த வடிவம்

இரும்பு சத்து குறைவாக இருந்தால், இதுமாதிரி நகத்தின் வடிவம் மாறும். இந்த குழிவு நகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இது தவிர தொற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் வயதான காலத்திலும் நகங்கள் தேக்கரண்டி வடிவில் மாறும்.

உலர்ந்து விரிசல் விட்ட நகங்கள்

நகங்களும், தோல் மற்றும் தலைமுடி மாதிரித்தான் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். ஈரப்பசையும் நகங்களுக்கு அவசியம். சிலருக்கு நகங்கள் உளர்ந்தும் சிதைந்தும் காணப்படும் இதற்கு இரும்புச்சத்தும், ஜிங்க் (Zinc) தாதுப்பற்றாக்குறையை முக்கிய காரணம்

நகச்சுற்று

நகத்தின் மடிப்பிற்க்கொள்ளும் பக்கவாட்டு பகுதிகளிலும் ஏற்படும் நோய் இதற்கு முக்கிய காரணம், நகத்தினை கடிப்பது தான். நகத்தின் மேல் பகுதி பாதிப்படைந்து பாக்டீரியா

நோய்க்கிருமிகள் தொற்றிக் கொண்டு சீழை உருவாக்குகின்றன. சிழ் இல்லாமல் இருந்தால் உங்கள் நகங்களை எப்போதுமே ஈரமாக வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே நகங்களை முறைப்படி உலர்த்தவும் வேண்டும்.

முறிந்த நகங்களில் ரத்தப்போக்கு

நகத்தின் அடித்தட்டுகளில் இதுபோன்ற நிலை காணப்படும். நகத்தில் ஏற்படும் காயங்களை இதற்கு முக்கிய காரணம். இதற்காக சில மருந்துகளும் உண்டு. இதய நோய் இருந்தாலும் இப்படி நிகழ வாய்ப்புண்டு.

மஞ்சள் நிற அல்லது தடித்த கால் விரல் நகங்கள்

உங்களுக்கு வயதாகிறது என்பதை இந்த நிறம் உணர்த்துகின்றது. கால்விரல்கள் நகங்கள் தடிப்பதும் முதுமையின் அடையாளங்கள் ஆகும்.

Recent Post

RELATED POST