தேவையான பொருட்கள்
பெரிய நண்டு – 2
தக்காளி விழுது – அரை கப்
வெங்காயம் – ஒன்று
இஞ்சி – சிறிதளவு
முட்டை – 2
சிக்கன் ஸ்டாக் – ஒரு கட்டி
மிளகு – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் நண்டை உடைத்து நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து ஆற வைக்க வேண்டும். ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இஞ்சியைத் தோல் நீக்கி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வெந்நீரில் சிக்கன் ஸ்டாக் கட்டியை கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தக்காளி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, நண்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
5 நிமிடம் நன்கு வெந்த பிறகு கரைத்த சிக்கன் ஸ்டாக் மற்றும் மிளகுத் தூளை அதில் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு அதில் அடித்த முட்டையை மெதுவாக வடிகட்டி சேர்த்து கலக்கி சில நொடிகள் கழித்து பரிமாறவும்.