தேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்

ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

உடல் நலமோடும் வலுவோடும் வாழ்வதற்கு விளையாட்டு மிக மிக அவசியமானதாகும். ஆனால் இன்றைய கல்விச்சூழலில் குழந்தைகள் விளையாடுவதை வீண் வேலையாகக் கருதி குழந்தைகள் எந்த நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கருதும் பெற்றோர்களாக மாறிவிட்டார்கள்.

தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நோஞ்சான்களாக இருப்பதைக் குறித்து கவலைப்படுவதில்லை. அதேசமயம் பணவசதி பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்தை  கொடுத்து வயதுக்கு மீறிய பலமடங்கு உளைச்சலை கொண்டவர்களாக வளர்த்து விடுகிறார்கள்.

குழந்தைப் பருவம் முதல் முதுமை பருவம் வரை எல்லோரும் விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டுகள் இருக்கின்றன. நேரடியாக விளையாட்டில் ஈடுபடாதவர்கள் கூட விளையாட்டு பற்றி ஆர்வத்துடன் பேசி மகிழ்வது உண்டு.

கிராமப்புறங்களில் கோடைகாலத்தில் கிரிக்கெட் போட்டிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு. விளையாட்டில் ஈடுபடுவதால் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

விளையாட்டில் சிறந்த பயிற்சி பெறும் இளைஞர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைகளைப் புரிந்துள்ளனர். அரசு துறைகளும் தனியார் அமைப்புக்களும் உதவி செய்கின்றனர்.

இளைய தலைமுறையினர் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடவும், அரசாங்கமும் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுக்கவும், பல்வேறு திட்டங்களை முன்வைத்திடவும்  இந்த தேசிய விளையாட்டு தினம் பயன்படுகிறது.