நாட்டு சர்க்கரையில் அடங்கியுள்ள நன்மைகள்

இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை சர்க்கரை, பல நோய்கள் உருவாவதற்கும் மூல காரணமாய் திகழ்கிறது.

மருத்துவ குணங்களை கொண்ட நாட்டு சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களைப் புறக்கணித்து, உடலுக்கு தீமை தரக்கூடிய, ரசாயனத் தன்மை கொண்ட வெள்ளை சர்க்கரையையே இன்று அதிகம் பயன்படுத்துகிறோம்.

நாட்டு சர்க்கரை இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்.

நாட்டு சர்க்கரையில் பலவிதமான நன்மைகள் உள்ளன. நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.

புற்று நோய் பாதிப்புகள் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.

நாட்டுச் சர்க்கரையில் வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.

இப்படி பல நன்மைகள் உள்ளதால் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு நாட்டு சர்க்கரையை பயன்படுத்த துவங்குங்கள்.

Recent Post

RELATED POST