ஊர் -திருநாவாய்
மாவட்டம் -மலப்புரம்
மாநிலம் -கேரளா
மூலவர் -நாவாய் முகுந்தன்
தாயார் -மலர்மங்கை நாச்சியார்
தீர்த்தம்– கமல தடாகம்
திருவிழா– வைகுண்ட ஏகாதசி ,திருவோணம்
திறக்கும் நேரம் – காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7;30மணி வரை
தல வரலாறு ;
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம். முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பெருமாளைப் பூஜித்து வந்தனர். ஒரு நாள் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் இல்லாமல் போனது.
எனவே கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் தேவியை அழைத்து இனிமேல் பூ பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்கு விட்டுக் கொடு என்றார். லட்சுமியும் அவ்வாறே செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை தரிசித்து வந்தான்.
பூஜையின்போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடனே தங்க சிம்மாசனத்தில் அமர செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக வரலாறு கூறுகிறது.
கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள். ஒருமுறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவகிரக ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் “நாவாய் ஸ்தலம்’ ஆனது. இதை தற்போது “திருநாவாய்” என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.