Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

நாயுருவி செடியின் மருத்துவ குணங்கள்

nayuruvi leaf benefits

மருத்துவ குறிப்புகள்

நாயுருவி செடியின் மருத்துவ குணங்கள்

நாயுருவி அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடியது. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும். நாயுருவிக்கு அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு.

நாயுருவிச் செடியின் இலைகளை இடித்துச் சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டுகள் விட்டால், காதில் சீழ் வடிவது நிற்கும்.

நாயுருவிச் செடியின் இலைகளை இடித்துச் சாறு எடுத்து, சிலந்தி கடித்த இடத்தில் தடவினால், விஷம் உடனே இறங்கும்.

நாயுருவிச் செடியைப் பறித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சி இறக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் காலையில் மட்டும் குடித்துவந்தால் வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.

நாயுருவிச் செடியின் விதைகளைக் காயவைத்து இடித்துப் பொடி செய்து சலித்துக்கொள்ளவும். இதைத் தினமும் இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் நோய்கள் குணமாகும்.

நாயுருவி இலையுடன் ஜாதிக்காயைச் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவிவந்தால் தேமல் மறையும்.

நாயுருவிச் செடியின் இலை, காராமணி – இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, நீர்க்கட்டு உள்ளவர்களின் தொப்புள் மீது பற்றுப்போட்டால் நீர்க்கட்டு நீங்கும்.

சிவப்பு நாயுருவி இலையுடன் வாஷிங் சோடா, சுண்ணாம்பு இரண்டையும் சேர்த்து அரைத்து உண்ணிகள் (மருக்கள்) மீதுதடவினால் அவை உடனே மறையும். நாயுருவி இலையை அரைத்துச் சாறு எடுத்து, உடலில் பூசிக்கொண்டால் தேமல், படை போன்றவை குணமாகும்.

நாயுருவி இலையை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் இறங்கும்.

நாயுருவி விதையைப் (10 கிராம்) பொடி செய்து, துத்திக் கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைத்து காலையில் மட்டும் சாப்பிட்டால் மூலம் குணமாகும்.

நாயுருவி விதையைப் (30 கிராம்) பொடி செய்து சாப்பிட்டால் பேதி குணமாகும்.

நாயுருவி செடியை கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்

நாயுருவிக் குச்சியால் தினமும் பல் துலக்கினால் முக வசீகரம் கிடைக்கும். அழகும், கவர்ச்சியும் உண்டாகும்.

மேலும் அனைத்து விதமான மூலிகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top