இரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்க காலை குளியல் மிகவும் முக்கியம்.

காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் இது பல பேருக்கு தெரிவதில்லை. பலருக்கு இரவில் குளிப்பதற்கு நேரமும் இல்லை.

பணிகளை முடித்துவிட்டு இரவில் தாமதமாக வருபவர்களுக்கு இரவு நேர குளியல் சாத்தியமில்லாதது. ஆனால் இதில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இரவில் குளித்து முடித்த பிறகு சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும். பகல் முழுவதும் வெளியே செல்லும் நீங்கள் இரவில் குளிப்பதால் உங்கள் உடலில் உள்ள கிருமிகள் நீக்கப்படுகிறது. முகத்தில் உள்ள எண்ணெய் பசையும் நீக்கப்படுகிறது.

நாள் முழுவதும் வெளியில் அலைவதால் உங்கள் முடியில் தூசி மற்றும் அழுக்கு சேருகிறது. இரவில் நீங்கள் குளிப்பதால் தலைமுடியில் உள்ள தூசி அழுக்குகள் நீங்குகிறது. இதனால் உங்கள் தலைமுடி மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தினமும் முடியவில்லை என்றால் வாரத்திற்கு இருமுறையாவது தூங்கும் முன் தலை முடியை சுத்தம் செய்வது அவசியம்.

தூக்கப் பிரச்சினை மற்றும் உடல் சோர்வு உள்ளவர்கள் தினமும் இரவில் குளித்துவிட்டு உறங்குவது சிறந்தது. ஆனால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் உள்ளவர்கள் இரவில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இரவில் குளிப்பது மூலமாக உங்கள் சருமத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். சிலருக்கு பருவநிலை மாறும்போது அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரவில் குளிப்பதனால் இதுபோன்ற அலர்ஜிகளில் இருந்து தப்பிக்க உதவும்.

Recent Post