நிலா துண்டப் பெருமாள் கோவில் வரலாறு

ஊர் – நிலாதிங்கள் துண்டம்

மாவட்டம் – காஞ்சிபுரம்

மாநிலம் – தமிழ்நாடு

மூலவர் – நிலாத் துண்டப் பெருமாள்

தாயார் – நேர் உருவில்லா வல்லி

தீர்த்தம் – சந்திர புஷ்கரணி

திருவிழா -பௌர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷம்

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

தல வரலாறு

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது பெருமாள் கூர்ம வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்ட மேரு மலையை தாங்கிக் கொண்டிருந்தார். அந்த வேலையில் கயிறாக பயன்பட்ட வாசுகி பாம்பு ஆலகால விஷத்தை கக்கியது. அது பாற்கடலில் கலந்தது.

கடலுக்கு அடியில் ஆமையாக இருந்த விஷ்ணு மீது பட்டு நீலமேனி கருப்பாக ஆனது. விஷ்ணுவின் மேனி நிறம் மாற பல முயற்சிகள் தேவர்கள் செய்தும் பலனளிக்கவில்லை. எனவே மனம் வருந்தி மகாவிஷ்னு பிரம்மாவிடம் கேட்கவே, பிரம்மா சிவனிடம் வேண்டினாள் உஷ்ணம் குறைந்து நிறம் மாற வாய்ப்புள்ளது என ஆலோசனை கூறினார்.

மகாவிஷ்ணுவும் சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவன் காட்சி கொடுத்து தன் தலையில் உள்ள பிறைச்சந்திரனை விஷ்ணு மீது ஒளி படும்படி கூறினார். சந்திரனும் அவ்வாறே செய்திட, விஷ்ணு மீண்டும் நீலவண்ணத்தை அடைந்து முன்பை விட மிகப் பொலிவுடன் விளங்கினார்.

இந்நிகழ்வின் அடிப்படையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சிவாலயத்தில் இருக்கும் இந்த பெருமாள் சன்னதி 108 திருப்பதிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. வாசுகி பாம்பு விஷம் கக்கி விஷ்ணுவுக்கு நிறம் மாறியதால் மனம் வருந்தி, இப்பெருமாளுக்கு குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது.

சந்திரனின் ஒளியால் மீண்டும் பொலிவு பெற்றதால் இத்தலப் பெருமாளை “நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்’ என்று அழைக்கின்றனர். சகோதர, சகோதரிகள் ஏகாம்பரேஸ்வரர் வணங்கினால் ஒற்றுமை கூடும் என நம்பப்படுகிறது.

ஒரு சிறிய சன்னதியில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இங்கு இவருக்கென தனி பரிகார தெய்வங்கள் இல்லை. நோய் தீர தனியே வந்தவர் என்பதால் தாயார் சன்னதியும் கிடையாது.

மகாவிஷ்ணுவின் நாபியில் இருக்கும் மகாலட்சுமியே “நேர் உருவில்லா தாயாராக’ வழிபடுகின்றனர். சிவனை வணங்கி குணமடைந்தவர் என்பதால் இங்கு பெருமாளுக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது.

Recent Post